Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 20.10.2021 Today Rasi Palan 20-10-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 20.10.2021 Today Rasi Palan 20-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
258

இன்றைய ராசிப்பலன் – 20.10.2021

20-10-2021, ஐப்பசி 03, புதன்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.26 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ரேவதி நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. அன்னா பிஷேகம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 02.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு தொடங்கினால் அனுகூலப் பலன் ஏற்படும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு பகல் 02.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போது நிதானத்துடன் இருப்பது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.

Previous articleநடைபெறப்போகும் குரு பெயர்ச்சியால் யார் யாருக்கு தன லாபம் கிடைக்கப்போகிறது இந்த 4 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் அற்புதம்!
Next articleமேஷம் ராசிக்காரர்களுக்கான‌ குருபெயர்ச்சி பலன்கள் 2021-2022 உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் புதிய மாற்றங்கள்!