பிரான்ஸ் Sartrouville (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 64 வயதுடைய பெண் ஒருவர் தனது 94 வயதுடைய தாயை கண்ணாடி குடுவை ஒன்றின் மூலம் தாக்கியுள்ளார். இதில் அவரின் தாயாா் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணி குறித்து அறிய முடியவில்லை. தாக்குதல் நடத்திய மகளை அப்பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
By: Tamilpiththan