அமெரிக்காவில் 12 வயது சிறுமியின் படுக்கை அறையில் புகுந்த நபர் தொடர்பில், அந்த சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
குறித்த 42 வயது நபர் தமது மகளிடம் பாலியல் உறவுக்கு முயன்றிருக்கலாம் எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொடர்புடைய சிறுமியின் தந்தை உள்ளூர் நேரப்படி காலை 5.30 மணியளவில் பணியிடத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது தூக்கத்தில் இருக்கும் தமது மகளின் அறையில் இருந்து சத்தம் கேட்கவே, அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்போது அரை நிர்வாண கோலத்தில் நபர் ஒருவர் மறைந்து நிற்பது தெரியவந்தது. இதனையடுத்து பொலிசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த 12 வயது சிறுமியின் அறையில் மறைந்திருந்த நபரின் பெயர் கிறிஸ்டோபர் லியோனார்ட் என்பதும்,
இருவரும் பேஸ்புக் வழியாக அறிமுகமாகியுள்ளதும், தொடர்ந்து மொபைல் சேட் மற்றும் அழைப்புகள் மூலம் நெருக்கமாகியுள்ளனர் எனவும் தெரியவந்தது.
மட்டுமின்றி குறித்த நபர் அந்த சிறுமியுடன் ஆபாச சேட் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதும் அம்பலமானது.
ஆனால் சிறுமி தம்மிடம் 21 வயது என கூறியதாகவும் அதனாலையே தாம் அவருடன் ஆபாச சேட் செய்துள்ளதாக லியோனார்ட் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, தாம் 12 வயது என்றே அவருக்கு தெரியப்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமது மகளிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது எனவும், வரை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், சிறுமியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது டெக்சாஸ் பொலிசார் அந்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.