சிறுநீர் கழித்த பெண்னால் ஏற்பட்ட பிரச்சனை இறுதியில் போராட்டமாக மாறியது
ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த வேளையில் 23 வயதான கீர்டெ பியேனிங் பிடிப்பட்டார்.
ஏறக்குறைய அனைத்தும் மூடப்பட இருந்த வேளையில், பெண்களுக்கான பொது கழிப்பிடம் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், அவருடைய நண்பர்கள் காவலிருக்க, கீர்டெ பியேனிங் சிறுநீர் கழிக்க ஓர் அமைதியான தெருவை தேர்வு செய்தார்.
சிறுநீர் கழித்தபோது, மூன்று போலீஸ் அதிகாரிகளால் அவர் பிடிக்கப்பட்டார். “அந்நேரத்தில் போய் நான் உரையாடலில் ஈடுபடுவதற்கு விரும்பவில்லை” என்று தெரிவித்த அவர், “அடுத்த நாள், இதனை எதிர்த்து தான் போராடப்போகிறேன்” என்று திடீரென கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த ஆண் நீதிபதி, பொது இடத்தில் இந்த பெண் சிறுநீர் கழித்ததற்கு பதிலாக ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இது டச்சு மொழியில் “வைல்டுபிளாஸ்சென்” என்று அறியப்படுகிறது.
இந்த சொல்லையே ஹேஷ்டேக்காகப் பயன்படுத்தி, சில பெண்கள் நீதிபதியின் இந்தப் பரிந்துரையை கேலி செய்துள்ளனர். மேலும் மாற்றுப் பாலினத்தவர் கழிப்பிடங்களை பயன்படுத்திக் கொள்வதில் ஏற்படும் கஷ்டங்களை காட்டுகின்ற புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆண்களைப் போலன்றி, உலோக அமைப்புக்களை பயன்படுத்துகிற தனித்தன்னமையான வழி எதுவும் பெண்களுக்கு இல்லை.
குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் வீதியில் வீசியதாகவும் நீதிபதி குற்றஞ்சாட்டியிருந்தார். இதனைப் பற்றி கருத்து எழுதிய ஒருவர் வாழைப்பழத் தோல்களை அல்லது சாக்லெட் பார் பொதிகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பாலின நடுநிலை குப்பைத்தொட்டி இருக்கிற இடத்தைப் பார்த்து போட்டுவிட முடியும் என்று நாசுக்காக சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைதியான தெருவை கடைசி தேர்வாகத்தான் தான் தேர்ந்தெடுத்ததாகக் கூறிய கீர்டெ பியேனிங், பிற ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் பெண்களுக்கான வசதிகள் மிகவும் மேம்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு சிறுநீர் கழிக்க எவ்விடமும் இல்லை என்பது ஆம்ஸ்டர்டாம் போன்ற சுற்றுலா நகரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? என்று அவர் ஏடி செய்தித்தாளில் தெரிவித்திருக்கிறார். .
இது பெரியதொரு பெண்ணியப் பேசுபொருளாக வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. மாறாக, இதனை சரி செய்வது மிகவும் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு குறைவான வசதிகளே உள்ளதை ஒப்புக் கொண்ட அந்த நீதிபதி, அவற்றை வழங்க வேண்டிய கடமை நகராட்சிக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
எப்படியானாலும் பெண்கள் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று கூறிய அவர், இது ஓர் அரிய வழக்கு என்று கூறினார்.
“இதற்கு நீதிமன்றப் படியேறிய இரண்டாவது பெண் நீங்கள் என்று நீதிபதி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பொது கழிப்பிடங்களின் எண்ணிக்கை பற்றி எந்தவொரு கொள்கை முகாந்திரமும் இல்லை என்று ஆம்ஸ்டர்டாம் நகராட்சி தெரிவித்துள்ளது.
“பெண்களின் கழிப்பிடங்களை விட ஆண்களின் கழிப்பிடங்கள் அதிகம்தான்.
“சமமான கழிப்பிட வசதிகள் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், செலவுகள் என்ன, இடம் உள்ளதா, தேவையானதா?”ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த வேளையில் 23 வயதான கீர்டெ பியேனிங் பிடிப்பட்டார்.
ஏறக்குறைய அனைத்தும் மூடப்பட இருந்த வேளையில், பெண்களுக்கான பொது கழிப்பிடம் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், அவருடைய நண்பர்கள் காவலிருக்க, கீர்டெ பியேனிங் சிறுநீர் கழிக்க ஓர் அமைதியான தெருவை தேர்வு செய்தார்.
சிறுநீர் கழித்தபோது, மூன்று போலீஸ் அதிகாரிகளால் அவர் பிடிக்கப்பட்டார். “அந்நேரத்தில் போய் நான் உரையாடலில் ஈடுபடுவதற்கு விரும்பவில்லை” என்று தெரிவித்த அவர், “அடுத்த நாள், இதனை எதிர்த்து தான் போராடப்போகிறேன்” என்று திடீரென கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த ஆண் நீதிபதி, பொது இடத்தில் இந்த பெண் சிறுநீர் கழித்ததற்கு பதிலாக ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இது டச்சு மொழியில் “வைல்டுபிளாஸ்சென்” என்று அறியப்படுகிறது.
இந்த சொல்லையே ஹேஷ்டேக்காகப் பயன்படுத்தி, சில பெண்கள் நீதிபதியின் இந்தப் பரிந்துரையை கேலி செய்துள்ளனர். மேலும் மாற்றுப் பாலினத்தவர் கழிப்பிடங்களை பயன்படுத்திக் கொள்வதில் ஏற்படும் கஷ்டங்களை காட்டுகின்ற புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆண்களைப் போலன்றி, உலோக அமைப்புக்களை பயன்படுத்துகிற தனித்தன்னமையான வழி எதுவும் பெண்களுக்கு இல்லை.
குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் வீதியில் வீசியதாகவும் நீதிபதி குற்றஞ்சாட்டியிருந்தார். இதனைப் பற்றி கருத்து எழுதிய ஒருவர் வாழைப்பழத் தோல்களை அல்லது சாக்லெட் பார் பொதிகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பாலின நடுநிலை குப்பைத்தொட்டி இருக்கிற இடத்தைப் பார்த்து போட்டுவிட முடியும் என்று நாசுக்காக சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைதியான தெருவை கடைசி தேர்வாகத்தான் தான் தேர்ந்தெடுத்ததாகக் கூறிய கீர்டெ பியேனிங், பிற ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் பெண்களுக்கான வசதிகள் மிகவும் மேம்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு சிறுநீர் கழிக்க எவ்விடமும் இல்லை என்பது ஆம்ஸ்டர்டாம் போன்ற சுற்றுலா நகரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? என்று அவர் ஏடி செய்தித்தாளில் தெரிவித்திருக்கிறார். .
இது பெரியதொரு பெண்ணியப் பேசுபொருளாக வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. மாறாக, இதனை சரி செய்வது மிகவும் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு குறைவான வசதிகளே உள்ளதை ஒப்புக் கொண்ட அந்த நீதிபதி, அவற்றை வழங்க வேண்டிய கடமை நகராட்சிக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
எப்படியானாலும் பெண்கள் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று கூறிய அவர், இது ஓர் அரிய வழக்கு என்று கூறினார்.
“இதற்கு நீதிமன்றப் படியேறிய இரண்டாவது பெண் நீங்கள் என்று நீதிபதி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பொது கழிப்பிடங்களின் எண்ணிக்கை பற்றி எந்தவொரு கொள்கை முகாந்திரமும் இல்லை என்று ஆம்ஸ்டர்டாம் நகராட்சி தெரிவித்துள்ளது.
“பெண்களின் கழிப்பிடங்களை விட ஆண்களின் கழிப்பிடங்கள் அதிகம்தான். அவ்வாறுதான் இதுவரையுள்ளது என்று துணை மேயருக்கான செய்தித் தொடாபாளர் பீட்டர் பால் எக்கெர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“சமமான கழிப்பிட வசதிகள் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், செலவுகள் என்ன, இடம் உள்ளதா, தேவையானதா?” என்று அவர் வினவியுள்ளார்.
ஆனால், இத்தோடு இந்த சம்பவம் முடிந்துவிடவில்லை.
ஆண்களின் கழிப்பிடங்களை பயன்படுத்த நீதிபதியின் சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் இணைவதற்கு பெண்களுக்கு ஊக்கமூட்டுவதற்தற்காக ஒரு ஃபேஸ்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். என்று அவர் வினவியுள்ளார்.
ஆனால், இத்தோடு இந்த சம்பவம் முடிந்துவிடவில்லை.
ஆண்களின் கழிப்பிடங்களை பயன்படுத்த நீதிபதியின் சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் இணைவதற்கு பெண்களுக்கு ஊக்கமூட்டுவதற்தற்காக ஒரு ஃபேஸ்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.