பிரேசில் நாட்டில் சகோதரனை கொடூரமாக கொலை செய்து மர்ம உறுப்பை அறுத்தெடுத்து சாப்பிட்ட சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு தாய், சகோதரனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு மகள் கரினா ரோக் (18) பொறுப்பில் விட்டு வெளியில் கடைக்கு கிளம்பியுள்ளார்.
3 மணிநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய அவர், கதவை திறக்குமாறு மகளை அழைத்துள்ளார். ஆனால் உள்ளிருந்த கரினா கதவை திறக்க மறுத்துள்ளார்.
உடனே பக்கத்து வீட்டு நபரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு மெழுகுவார்த்திகளுக்கு நடுவில் அவருடைய மகன் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்ட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதற்கிடையில் அங்கிருந்து தப்ப முயன்ற கரினாவினை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், விளையாடலாம் என படுக்கைக்கு சிறுவனை அழைத்து சென்ற கரினா தலையணையை வைத்து முகத்தை மூடி கொலை செய்துள்ளார்.
அதன்பிறகு அவனுடைய மர்ம உறுப்பை அறுத்து சாப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மாந்தீரிக வேலைகள் போன்ற சந்தேகத்தினை எழுப்புகின்றன. தடவியல் துறையினர், எறிந்த நிலையில் செல்போன், மெம்மரி கார்டு, ஒரு சிறிய கத்தி மற்றும் கஞ்சா இலையை கண்டுபிடித்துள்ளனர்.
செல்போனை எரித்திருப்பதால் ஆன்லைனில் இருந்த தடயங்களை அழிக்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.