குணப்படுத்த முடியாத அரிவாள் செல் நோய் ! ஆட்டிப்படைக்கும் இந்த நோயைப் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க !

0

தற்போது உலகில் நம்மில் பலருக்கும் தெரிந்திராத எத்தனையோ புது புது நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றோம். மனிதர்களைத் தாக்கும் நோய்களில் தற்போது தெரியாதது தான் ஏராளமாக உள்ளது.

ஆம், நமக்கு இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்றால் இரத்த சோகை, இரத்த புற்றுநோய் மட்டும் தான் தெரியும். ஆனால் இரத்தம் சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கியமான, அதே சமயம் இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத ஆபத்தான ஒரு நோய் உள்ளது. அது தான் அரிவாள் செல்நோய் எனப்படும் அரிவாள் செல் சோகை. இதைப்பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

அரிவாள் செல் நோய்

அரிவாள் செல் சோகை அல்லது அரிவாள் செல் நோய் என்பது இரத்த சிவப்பணுக்களின் மரபணு நோயாகும். சாதாரணமாக ரத்த சிவப்பணுக்களை நாம் வட்ட வடிவில் தான் அவதானித்திருப்போம். இவ்வாறான தோற்றத்துடன் நமது ரத்தக்குழாயினுள் எளிதில் வளைந்து கொடுக்கும் விதமாக இந்த செல் காணப்படுகின்றது.

ஆனால் அரிவாள் செல் நோய் ஏற்பட்டால் வட்ட வடிவில் இருக்கும் அணுக்கள் அரிவாள் வடிவில் மாறியிருப்பதுடன், பிசுபிசுப்புத்தன்மை கொண்டதாகவும், ரத்தக்குழாயில் எளிதில் ஒட்டும் விதமாகவும் இருக்குமாம். இதனால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு வலி மற்றும் திசு பாதிப்பு ஏற்படுகின்றது.

அரிவாள் செல் நோயின் அறிகுறிகள்

இளம் வயதில் தெரிய ஆரம்பிக்கும் இந்த நோய் தாக்கியிருந்தால் அதனை 4 மாத குழந்தையாக இருக்கும் போதே தெரிந்துவிடுமாம். இந்நோயிலும் பல வகைகள் காணப்பட்டாலும் ஆனால் ஒரே மாதிரியான அறிகுறியினையே காட்டுகின்றது. குறித்த நோயினை குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் சில மருந்துகளை நோய்களில் அறிகுறிக்கு ஏற்ப பரிந்துறை செய்கின்றனர். ஆனால் உணவில் டயட்டில் ஒருசில மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த கோளாறைக் கையாளலாம்.

இரத்த சோகையினால் அதிகளவு சோர்வு அல்லது எரிச்சலுணர்வு

சிறுநீரக பிரச்சனையினால் படுக்கையை நனைப்பது

மஞ்சள் காமாலையினால் மஞ்சள் நிற கண்கள் மற்றும் சருமம்

கைகள் மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் வலி

அடிக்கடி நோய்த்தொற்று

மார்பு, முதுகு, கைகள் அல்லது கால்களில் வலி

காய்கறிகள் மற்றும் பழங்கள்

பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், கேரட், காளான்கள், அஸ்பாரகஸ், ஆப்பிள், தக்காளி மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை உண்பது மிகவும் நல்லது.

புரோட்டீன் மிக மிக அவசியம்

புரோட்டீன் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கலாம். அதற்காக அதனை முழுமையாக தவிர்க்கக்கூடாது. புரோட்டீன் நிறைந்த உணவுகளான முட்டை, சால்மன் அல்லது மத்தி, கல்லீரல் அல்லது உறுப்பு இறைச்சிகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள் இரத்த சோகையினால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தைக் குறைக்க உதவும். இத்தகைய கொழுப்புக்கள் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பால், அவகேடோ, நட்ஸ், விதைகள், ஆர்கானிக் வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஃபோலேட் நிறைந்த உணவுகள்

இவ்வகையான உணவுகள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும். கொண்டைக்கடலை, பீன்ஸ், பருப்பு வகைகள், பசலைக்கீரை, கல்லீரல் மற்றும் உறுப்பு இறைச்சிகளில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அவகேடோ, பீட்ரூட், ப்ராக்கோலி மற்றும் அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் உள்ளது. ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்டுகளும் உதவி புரியும்.

நீர்

உடல் வறட்சி இந்நோயின் நிலைமையை இன்னும் மோசமாக்குமாம். சில தருணங்களில் உயிருக்கே ஆபத்தினையும் ஏற்படுத்துகின்றது. எனவே தினமும் போதுமான அளவு நீரைப் பருகுங்கள். இதனால் உடல் வறட்சி தடுக்கப்பட்டு உயிரிழப்பிலிருந்தும் தப்பிக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை !
Next articleஅக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்கணுமா? இதோ சில எளிய இயற்கை வழி !