எ‌ப்போது‌ம் இளமையாக இரு‌க்க!

0

எ‌ப்போது‌ம் இளமையாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌‌‌ன் ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌விரு‌ம்‌பு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அது சா‌த்‌திய‌மி‌ல்லையே. சா‌த்‌திய‌மி‌ல்லாததை சா‌த்‌தி‌ய‌ப்படு‌த்துவதுதா‌ன் அ‌றி‌வி‌ய‌ல் ‌வி‌ஞ்ஞான‌த்‌தி‌ன் வேலை.
எனவே ம‌னித‌னை எ‌ப்போது‌ம் இளமையாக வை‌த்‌திரு‌ப்பது ‌கு‌றி‌த்து நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல், எ‌ஸ்6கே1 எ‌ன்ற புரத மூல‌க்கூறுக‌ளி‌ன் செய‌ல்பா‌ட்டை தடை செ‌ய்வத‌ன் மூல‌ம் வயதாவதை‌த் தடு‌க்கலா‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் ல‌ண்ட‌‌னி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள்.

அதாவது, எ‌ஸ்6கே1 எ‌ன்ற புரத மூல‌க்கூறை தடை செ‌ய்வத‌ன் மூல‌ம், வயதான கால‌த்‌தி‌ல் தா‌க்கு‌ம் நோ‌ய்களு‌ம், இயலாமையு‌ம் தடு‌க்க‌ப்படு‌கிறது.
இ‌ந்த ஆ‌‌ய்‌வினை எ‌லிக‌ள் மூல‌ம் சோதனைக‌ள் நட‌த்‌தின‌ர். ஆ‌ய்‌வி‌ல், அ‌ந்த எ‌லிக‌‌ளி‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி அ‌திக‌ரி‌த்தது‌ம், நோ‌ய்‌க‌ள் எதுவு‌ம் தா‌க்காதது‌ம், அத‌ன் ஆயு‌ட்காலமு‌ம் அ‌திக‌ரி‌த்தது‌ம் தெ‌ரிய வ‌ந்தது.
இ‌ந்த ஆ‌ய்‌வினை ம‌னித‌ர்க‌ளிடமு‌ம் நட‌த்‌தி வெ‌ற்‌றி காண முடியு‌ம் எ‌ன்பது வ‌ி‌ஞ்ஞா‌னிக‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கையாகு‌ம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article09.11.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 23, வெள்ளிக்கிழமை!
Next articleஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்!