உங்களுக்கு குதிகால் வலி வருவதற்கு என்ன காரணம்? தடுக்க என்ன செய்யலாம்!

0

உங்களுக்கு குதிகால் வலி வருவதற்கு என்ன காரணம்? தடுக்க என்ன செய்யலாம்!

உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழத்தல், நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் மற்றும் அதிகமாக நடத்தல் போன்றவற்றினால் அதிகளவான குதிகால் வலி, இடுப்பு வலி மற்றும் நிற்க நடக்க முடியாத நிலைமை உருவாகும்.

குதிகால் வலி ஏற்பட காரணங்கள்

பெண்களில் பலரும் ஹைஹீல்ஸ் செருப்புகளை காலில் போட்டுக்கொண்டு நடப்பதனால், பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைவதன் மூலமும், கரடுமுரடான தோல் செருப்புகள் மற்றும் பிளாஸ்டிக் செருப்புகளை அணிதல் என்பவற்றினாலும், கூம்பு வடிவ ஷ_க்களை அணிவதன் மூலம் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைவடைவதனால் மூலம் காலில் வலி ஏற்படுகின்றது.

குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுப்பதற்கான பர்சா எனும் திரவப்பையில் அழற்சி ஏற்பட்டு வீங்கும் போதும், குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்வதின் காரணமாகவும், இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக காணப்படுவதனாலும், காசநோய், எலும்பு வலுவிழப்பு நோய், முடக்குவாதம், தட்டைப் பாதம், கோணலாக வளர்ந்த பாதம் மற்றும் தன்தடுப்பாற்றல் நோய் போன்ற பல காரணங்களாலும் குதிகால் வலி ஏற்படமுடியும்.

குதிகால் வலி குறைய செய்ய வேண்டியவை

தினமும் 10 தடவைகள் தரையில் பாதங்களை நன்கு அழுந்த பதித்து நின்று கொண்டு முன்னங்காலை ஊன்றி குதிகால்களை உயர்த்துதல் அல்லது தினமும் 15 தடவைகள் தரையில் படுத்து கொண்டு காலின் பாதங்களுக்கு அடியில் ஒரு உடற்பயிற்சி பந்தினை அல்லது டென்னிஸ் பந்தினை வைத்து பாதங்களை கொண்டு அதில் மெதுவாக அழுத்தம் கொடுத்தல் அல்லது பந்தினை முன்னும் பின்னும் உருட்டும் போது இரத்த ஓட்டம் சீராகி கால்களில் வலி குறைவடையும்.

மேலும் குதிகால் வலி வராமல் தடுப்பதற்கு இரவு படுக்கும் முன்னும் காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவுதல் மற்றும் கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல் என்பன உதவுவதுடன், செருப்புகளை கழற்றிவிட்டு காலை நன்கு தரையில் பதித்து நின்று, முதலில் கட்டை விரல் பின்னர் சுண்டுவிரல் என மாறிமாறி 5 தடவைகள் உயர்ததுதல் சிறந்த பலனைத்தரும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஐஸ்கட்டியை நாள்தோறும் 2 நிமிடம் இப்படி பயன்படுத்திப்பாருங்கள் தீராத தலைவலி மற்றும் முகப்பரு என்பன ஓடிவிடும் !
Next articleசாப்பாட்டில் இருக்கும் பச்சை மிளகாயை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிடுறீங்களா? இதை படித்தால் இனி உடனேயே பச்சை மிளகாயை சாப்பிட்டுவிடுவீங்க!