கொழுப்பு குறைவடைந்து உடல் பருமன் குறைவதற்கு உதவும் இயற்கை மருத்துவ வழிகள்!

0

கொழுப்பு குறைவடைந்து உடல் பருமன் குறைவதற்கு உதவும் இயற்கை மருத்துவ வழிகள்!

கொழுப்பு குறை

வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு ஆகியனவற்றின் சாற்றினைக் குடித்தால் அல்லது கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைவடைந்து உடல் எடை குறைவடையும்.

மேலும், அறுகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்லது ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் அல்லது பாதாம் பவுடருடன் சிறிதளவு தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைவடைந்து உடல் பருமன் குறைவடையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட்டால் அல்லது சோம்பு எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி நன்கு சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் அல்லது சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் கொழுப்பு குறைவடைந்து உடல் பருமன் குறைவடையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு ஆவாரம் பூ! பரம்பரை வழுக்கைக்கு இயற்கை தரும் இளமை வரம்!
Next articleரத்த அழுத்த நோய் அதனால் ஏற்படும் மயக்கமும், தலை சுத்தலும் உடனே குணமாகும்!