கல்பிரமி
உடலை கருங்கல் போல் மாற்றும் சக்தி , கல் பிரமி மூலிகைக்கு உண்டு.இந்த கல் பிரமி ஓரு மலை மூலிகையாகும்.இந்த கல் பிரமி மூலிகையை பிடுங்கி காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . அதன் பிறகு இந்த கல் பிரமி பொடியை 3 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வர உடல் கருங்கல் போல மாறும். இது ஓரு காயகல்ப மூலிகையாகும்.காயகல்ப முறைபடி தான் உண்ண வேண்டும் .இந்த மூலிகை உண்டு உடல் காயகல்பமான பின்பு இரும்பால் உடலை தட்டினால் கூட உடலுக்கு ஓன்றுமாகாது.மேலும் ஓரு இரும்பு இன்னொரு இரும்புடன் தட்டும் போது சத்தம் வருமோ அதை போல் சத்தம் வருமாம் என்று சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.
மூளைக்கு பலம் அளிக்கும் நீர் பிரம்மி
மூளைக்கு பலம் அளித்து, வயோதிகத்தினால் ஏற்படும் மறதியை போக்கக் கூடிய நீர் பிரம்மி என்ற மூலிகையின் மருத்துவ குணங்களை பற்றி இன்று காண்போம்.பிரம்மனின் மறுபாதி என்று ஐதீகமாக நம்பப்படும் இந்த மூலிகையானது எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் மூளைக்கு பலத்தை கொடுத்து, மறதியை போக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கக் கூடியதாக உள்ளது.
புற்று நோய்கள் உண்டாவதற்கான உடலில் உள்ள கிருமிகள் தோன்றாத வண்ணம் தடுப்பதால், இது புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உடையதாக விளங்குகிறது. வேபாபா முன்னேரி என்று இதன் தாவர பெயரை குறிப்பிடுகின்றனர்.நீர் பிரம்மி செடி என்பது நீர் நிலைகளின் கரையோரங்களில் வளரக் கூடிய சிறிய செடியாகும். பார்ப்பதற்கு பருப்பு கீரை என்று சொல்லக் கூடிய கீரையைப் போன்று தோன்ற கூடிய, ஆனால் அதை விட சற்று சிறியதான தோற்றத்தில் காண கிடைக்கிறது.
இதன் இலைகள் நிறைய நீர் சத்து நிரம்பி காணப்படும்.நீர் பிரம்மி இலைகளை நரம்புகளை பலப்படுத்தும் ஒரு டானிக் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நீர் பிரம்மி இலைகளை பயன்படுத்தி மருந்து ஒன்றை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் நீர் பிரம்மி இலைகள், நெய், சிற்றரத்தை பொடி, தேன். ஒரு பாத்திரத்தில் அரைஸ்பூன் அளவு நெய் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் நன்றாக கழுவிய ஒரு பிடி அளவு நீர் பிரம்மி இலைகளை அதனுடன் சேர்க்க வேண்டும்.
இலைகள் நெய்யில் நன்றாக பொரிந்து வரும் வரையில் வதக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை அளவு சிற்றரத்தை பொடி சேர்க்க வேண்டும். சிற்றரத்தை பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் பரவலாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். இலைகள் நெய்யில் பொரிந்தவுடன் சிறிதளவு நீர் விட்டு அதை கொதிக்க விட வேண்டும். பின்னர் நன்றாக கொதித்த பின் இதை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை வடி கட்ட வேண்டும்.
இதோடு தேன் சேர்த்து ஒரு தேநீரைப் போல பருகுவதன் மூலம், மூளைக்கு பலம் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. மேலும் சளித் தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நிவாரணத்தை தரக் கூடியதாக உள்ளது. மேலும் அஜீரணத்தால் ஏற்படக் கூடிய புளித்த ஏப்பத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.இதை பருகுவதன் மூலம் நுரையீரல் கோளாறுகளுக்கும் அற்புதமான மருந்தாகவும் இந்த கஷாயம் விளங்குகிறது. சிற்றரத்தையுடன் சேர்த்து தயார் செய்யப்பட்ட இதை பருகுவதால் சளி, இருமலை போக்குகிறது.
சிற்றரத்தையும், நீர் பிரம்மியும் ஆஸ்துமா, மூச்சு திணறல், சளித் தொல்லை போன்றவற்றை கட்டுப்படுத்தும் நிவாரணிகளாக நன்றாக செயல்படக் கூடியவையாகும்.நீர் பிரம்மியின் இலைகளை காய வைத்து எடுத்து பொடி செய்த மருந்தை ஒரு நாளைக்கு ஒரு டோஸ் என்ற முறையில் 750 மிலி கிராம் முதல் 1500 மிலி கிராம் வரை கூட தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் நரம்புகள் பலம் பெறுகின்றன. மூளைக்கு இதம் கிடைக்கிறது.
நீர் பிரம்மி நரம்பு கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு, மனநோய், இவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக மற்றும் மூட்டு வலிகளுக்கு, ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடன் நீர் பிரம்மி இருமல், காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பாரம்பரிய குணம் ஞாபக சக்தியை அதிகப்படுத்துவது.சித்த மருத்துவத்தில் இவை, மூட்டு வலி, இணைப்புகளில் வீக்கம், மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன் படுத்தப்படுகிறது. இவை குரல்வளை அழற்சி, நெஞ்சு எரிச்சல்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
நீர் பிரம்மி முழுத் தாவரமும் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. நரம்புகளைப் பலப்படுத்தும். சிறுநீரைக் கட்டுப்படுத்தும். மலமிளக்கும்; பேதியைத் தூண்டும்.
பல கிளைகளாகப் பிரிந்த சதைப் பற்றான சிறு செடி வகைத்தாவரம். கணுக்கள் வேர்களுடன் கூடியதாக அடர்த்தியான தொகுப்பாக காணப்படும். தாவரம் முழுவதும் பச்சை நிறமாகக் காணப்படும்.
இலைகள் நீண்டு உருண்டையானவை; சதைப்பற்றானவை; மலர் வெண்மையானது. செங்கருநீலமான திட்டுகள் இதழ்களில் காணப்படும். மலர்கள் விரைவாக வாடிவிடும் தன்மை கொண்டவை.
சமவெளிகள், கடற்கரை ஓரங்களில் பரவலாகவும், தாழ்வான சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை ஒட்டி மிகவும் அடர்த்தியானதாகவும் வளர்கின்றது. இதனுடைய மருத்துவ குணங்களுக்காக தற்போது இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது.
சாம்பிராணி பூண்டு, பிரமிய வழுக்கை, நீர்ப்பிரம்மி சப்தலை, வாடிகம், சருமம், விவிதம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.
வீக்கம் கட்டிகள் கரைய முழுதாவரத்தை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டு அவற்றின் மீது பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும்.
தொண்டை கரகரப்பு குணமாக முழுத் தாவரத்தை நீரில் கழுவி சுத்தம் செய்து, அரைத்து, பிழிந்த சாறு 4 தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். அல்லது ஒரு பிடி அளவு தாவரத்தை வெண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டும். தினமும் ஒரு வேளை 5 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
கோழை கட்டு குணமாக முழுதாவரத்தையும் அரைத்து பசையாக்கி நெஞ்சுப் பகுதியில் பூசி வர வேண்டும்.
நீர் பிரம்மியின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பண்பு சமீபத்திய உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு தளர்ச்சியைக் குணமாக்கும் பல மருந்துத் தயாரிப்பிலும் நீர் பிரம்மி சேர்கின்றது.
குழந்தைகளுக்கான ஞாபக சக்தியை அதிகரிக்கும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் நீர்ப்பிரம்மியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.