ஜங்க் உணவுகள் மற்றும் எண்ணெய் பசை உணவுகளை அதிகம் உட்கொண்டும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையாலும் , நமது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கிறது. இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் பல்வேறு மோசமான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் இதய நோயால் உயிரையே இழக்க வேண்டியிருக்கும்.
உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே, நம் இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்துவிடலாம்.
பொதுவாக உடலுக்கு நல்ல கொழுப்புக்கள் அவசியமான ஒன்று. கெட்ட கொழுப்புக்களோ தீங்கு விளைவிக்கக் கூடியவை. இப்போது நாம் பார்க்கப் போவது, தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்களைக் கரைக்க உதவும் சில இயற்கை வழிகளைத் தான்.
மல்லி விதைகள் :- மல்லி விதைகள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களைக் குறைக்க உதவும் பொருட்களுள் ஒன்று. அதற்கு 1 டீஸ்பூன் மல்லி பொடியை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் :- 1 டீஸ்பூன் நெல்லி பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதன் மூலமும் இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கலாம்.
ஆரஞ்சு ஜூஸ் :- ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே உயர் இரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், தினமும் 2-3 முறை ஆரஞ்சு ஜூஸைக் குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:- 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு வேளைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்திருப்பதைக் காணலாம்.
தேன் மற்றும் வெங்காய சாறு:- 1 டீஸ்பூன் வெங்காய சாற்றுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் சாப்பிட, கொலஸ்ட்ரால் அளவு குறைந்திருப்பதைக் காணலாம்.
ஓட்ஸ் :- ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு பௌல் ஓட்ஸை சாப்பிடுங்கள்.
நட்ஸ்:- நட்ஸில் வால்நட்ஸ், பாதாம் போன்றவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நட்ஸில் நார்ச்சத்து மற்றும் தாவர ஸ்டெரால்கள் உள்ளது. நட்ஸ்களை அளவாக சாப்பிட்டால் தான், அதன் முழுமையான நன்மைகளைப் பெற முடியும்.