உங்களுக்கு ஏற்படும் பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சனிக்கிழமைகளில் இந்த ஒருபொருளை கோவிலுக்கு தானமாக கொடுத்துப்பாருங்க!

0

உங்களுக்கு ஏற்படும் பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சனிக்கிழமைகளில் இந்த ஒருபொருளை கோவிலுக்கு தானமாக கொடுத்துப்பாருங்க!

சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு பொருட்களை தானமாக கொடுப்பது பணப் பிரச்சிணையில் இருந்து எம்மை பாதுகாக்கும்.

குறிப்பாக நவகிரக சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில்களுக்கு இரும்பு பொருட்களை சனிக்கிழமை அன்று தானமாக கொடுக்க வேண்டுமாம்.

கோவிலில் சமைப்பதற்கு இரும்பினால் செய்யப்பட்ட அடுப்பு தேவை என்றால் கூட வாங்கி தானம் கொடுக்கலாம்.

சிறிய சொம்பிலிருந்து பெரிய அடுப்பு வரை உங்கள் வசதிக்கு ஏற்ப எந்த பொருளை தானம் கொடுத்தாலும் அது நல்லது.

சனிக்கிழமை அன்று தானம் கொடுக்க வேண்டிய இரும்பு பொருட்களை, சனிக்கிழமை கடைக்கு சென்று வாங்காமல், வேறு ஏதாவது கிழமையில் அந்த இரும்பு பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு உங்கள் வீட்டிலிருந்து கொண்டு போய் இந்த தானத்தை, கோவிலுக்கு செய்வது நல்லது.

இரும்பு என்பது சனிபகவானுக்கு உகந்த ஒரு பொருள் என்பதால் இந்த தானம் நம்முடைய கஷ்டங்களை குறைக்க ஒரு பரிகாரமாக இருக்கும்.

நிறைய பேருக்கு தெரியும் சனிக்கிழமை எண்ணெய் வாங்கக் கூடாது என்று.

எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமையில் வாங்கினால் செய்யும் தொழிலில் நஷ்டம், வருமானத்தில் தடை, ஏற்படும். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் கடன் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த தவறை செய்யாதிங்க. இதேபோல சனிக்கிழமை என்றால் காகத்திற்கு எள் சாதம் வைப்பது, கோவிலுக்கு சென்று எள் தீபம் ஏற்றுவது போன்ற பழக்கம் நம்மில் சில பேருக்கு இருக்கும்.

சனிக்கிழமை எள் பரிகாரம்

என்னதான் சனிக்கிழமையில் எள் சம்பந்தப்பட்ட பரிகாரத்தை நாம் செய்தாலும், சனிக்கிழமை அன்று கடைக்கு சென்று எள் வாங்கி இப்படிப்பட்ட பரிகாரத்தை செய்யக்கூடாது.

முந்தைய நாளே எள் வாங்கி நம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் கோவிலுக்கு செல்லும்போது கோவிலுக்கு அருகிலேயே எள் முடிச்சு கட்டி வைத்த தீபம் வாங்கி கோவிலில் உள்ள நவக்கிரக சன்னிதியில், சனி பகவானுக்கு தீபம் ஏற்றுவார்கள்.

இப்படி எள் வாங்கினால் அது தவறு கிடையாது. அதன் மூலம் எந்த தோஷமும் ஏற்படாது. கடையில் இருந்து பணம் கொடுத்து எள் வாங்கி நம் வீட்டிற்கு எடுத்து வருவது சாஸ்திரப்படி தவறு.

மேல் சொன்ன விஷயங்களை சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் அடையலாம். பணத்தை சேமித்து வைக்கவும் இந்த பரிகாரம் உதவும். பண தோஷம் இருந்தாலும் நாம் சம்பாதிக்கும் பணம் நிலைக்காது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 16.03.2022 Today Rasi Palan 16-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 17.03.2022 Today Rasi Palan 17-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!