Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 16.03.2022 Today Rasi Palan 16-03-2022 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 16.03.2022 Today Rasi Palan 16-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
366

இன்று 16-03-2022 பங்குனி மாதம் 02ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று திரியோதசி திதி பகல் 01.40 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. இன்று மகம் நட்சத்திரம் இரவு 12.20 வரை பின்பு பூரம். இன்று சித்தயோகம் இரவு 12.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறப்பிடம் ஒற்றுமை பலப்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பெரிய மனிதர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.

Previous article17ஆம் தேதிக்குப் பின்னர் இந்த‌ 6 ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றம்! யாருக்கும் சுப செய்திகள் தேடி வரும்!
Next articleஉங்களுக்கு ஏற்படும் பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சனிக்கிழமைகளில் இந்த ஒருபொருளை கோவிலுக்கு தானமாக கொடுத்துப்பாருங்க!