உங்களுக்கு அதிகமாக ஞாபக மறதியா! ஒரு மகிழ்ச்சியான செய்தி!

0
443

உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ, ஞாபகத் திறன் குறைவாக இருக்கிறதா? சில குழந்தைகளுக்கு படித்த பாடம் அடிக்கடி மறந்துபோகும். இன்னும் சில குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் பண்ண முடியாமல் திணறுவாகள்.

இயல்பிலேயே சிலருக்கு நல்ல நினைவாற்றலும் நன்றாக படிக்கும் திறனும் இருக்கும். சிலர் அவர்களின் கடின உழைப்பால் ஞாபகத்தை நிலை நிறுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலருக்கு என்ன செய்தாலும் மண்டையில் ஏறாது. இதற்கு அவர்களை குறை செல்வது தவறு.

மூளையின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனதான் இதற்கு காரணம் என்று இந்தய வம்சாவளியான கலிபடா பஹன் என்பவர் கூறுகிறார். இவர் சிகாகோவிலுள்ள ரஷ் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.

தொடர்ந்து பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் அதிகரிக்கும் . கற்றலின் திறனும் அதிகரிக்கும் என்று இவர் ஆராய்ச்சி செய்தத்தில் தெரிய வந்துள்ளது.

மிகவும் பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாக படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறார். இந்த ஆய்வில் பட்டையை எலிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், அவற்றின் மூளையின் செயல்திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரித்ததாக கூறுகிறார்.

மூளையில் ஹைபோ கேம்பஸ் என்ற பகுதி உள்ளது. அதுதான் நினைவுகளை, உணர்வுகளை சேகரித்து வைக்கும் பகுதி. மோசமாக படிக்கும் மாணவர்களுக்கு , ஹைபோகேம்பஸில் CREB என்ற புரோட்டின் குறைவாக சுரக்கிறது. இந்த புரொட்டின் தான் மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துபவை.

இந்த புரொட்டினை அதிகரிக்கச் செய்கிறது பட்டை. எலிகளுக்கு பட்டையை உணவாக தந்து பின்னர் அதன் மூளையை பரிசோதித்து பார்த்ததில் CREB யின் அளவு அதிகரித்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது என்று பஹான் கூறியுள்ளார்.

Previous article30 நாட்கள் தேனில் பேக்கிங் சோடா கலந்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா!
Next articleஃபேஸ்புக் உபயோகிப்பது டீன் ஏஜினருக்கு நல்லதா! கெட்டதா!