Home Patti Vaithiyam ஃபேஸ்புக் உபயோகிப்பது டீன் ஏஜினருக்கு நல்லதா! கெட்டதா!

ஃபேஸ்புக் உபயோகிப்பது டீன் ஏஜினருக்கு நல்லதா! கெட்டதா!

0
372

ஃபேஸ்பூக், ட்விட்டர் இப்போது பிறந்த குழ்ந்தைகள் கூட உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. சிறு வயதினர் ஃபேஸ்புக் உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைகளை அவ்ர்களின் பெற்றோர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற ஆய்வை பிரிட்டன் மேற்கொண்டது.

இந்த ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியமன வாழ்க்கை முறையை சமூக வலைதளங்கள் பாதிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

வெறும் 15 சதவீத பெற்றோர்களே, சமூக வலைதளங்களால், தங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் என்று பிர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

40 சதவீத பெற்றோர்கள் சமூக வலைத்தளங்களால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்புகள், எதிர்மறை குணங்கள் காண்ப்படுவதாக, அவற்றை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

அதேபோல், மிகக் குறைந்த சதவீதத்தினர், சமூக வலைத்தளங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்மறை எனர்ஜியை தருகிறது என்று கூறுகின்றனர் என்கிறார் தலைமை ஆய்வாளர் ப்ளேய்ர் மொர்கன்.

தவறுகளை மன்னிப்பதும், சுய கட்டுப்பாடும் மிக அவசியம். ஆனால் இவைகள் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் குறைகின்றன என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

60 சதவீத பெற்றோர்கள் கூறுவது என்னவென்றால் தங்கள் குழந்தைகளிடம் கோபம் அதிகமாக தென்படுகிறது. அதேபோல், முரட்டுத்தனம், சரியான முடிவுகளை எடுக்க திணறுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் அலட்சியம் , மற்றவர்களின் மேல் வெறுப்புணர்ச்சி ஆகியவை உண்டாகிறது என்று தங்கள் பிள்ளைகளின் குணாதிசயங்களைப் பற்றி கூறுகின்றனர்.

ஃபேஸ்புக் உபயோகிப்பதால் ஏற்படும் நல்ல விஷயங்கள் என்னவென்றால், மிக முக்கிய 5 மாற்றங்கள் டீன் ஏஜினிரிடம் காணப்படுகிறது. அவை ,

1) நகைச்சுவை உணர்வு

2) அழகுணர்ச்சி

3)கற்பனைத் திறன்

4 ) காதல்

5 ) தைரியம்
ஆகியவைகள் குழந்தைகளிடம் அதிகரித்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Previous articleஉங்களுக்கு அதிகமாக ஞாபக மறதியா! ஒரு மகிழ்ச்சியான செய்தி!
Next articleநீங்க அடிக்கடி செல்ஃபி எடுப்பவரா! உங்களுக்குதான் இது!