இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத நட்டு மருந்து, செய்முறை.
தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.
அறிகுறிகள்
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 லிட்டர்
கிராம்பு – 60 கிராம்
பட்டை – 4 துண்டுகள்
தயாரிக்கும் முறை:
நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
எப்போது பருக வேண்டும்?
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.