அவள் எனது மனைவிதான்! 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்! நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்!

0
1130

போலியான திருமண சான்றிதழை காட்டி மனைவி என உரிமை கொண்டாடி நடிகர் அபி சரவணன் தன்னை மிரட்டுவதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை அதிதி மேனன் பொலிசில் புகார் அளித்திருந்தார்.

அவரை ஒரு காலத்தில் காதலித்தது உண்மைதான், ஆனால் அவரது குணம் பிடிக்காத காரணத்தால் பிரிந்துசென்றுவிட்டேன். ஆனால் அவருக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறுவது பொய் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அபி சரவணன் கூறியதாவது, 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். அவள் எனது மனைவிதான்.

நான் வீட்டில் இல்லாதபோது எனது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

அவரை எனது மனைவியாக ஏற்க இப்போதும் தயாராக இருக்கிறேன். புகாரை சட்டப்படி சந்திப்பேன் என கூறியுள்ளார்.

Previous articleதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்! வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்!
Next articleயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி! என்ன ஆனது!