அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் ஆபத்தா!

0

அசிடிட்டி என்றதுமே கடைகளில் விற்கும் மருந்துகள் வாங்கி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

அசிடிட்டி என்றதுமே கடைகளில் விற்கும் மருந்துகள் வாங்கி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம்.

உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், வலியும் ஏற்படும். நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வரும். ரத்த வாந்தி, தொடர் இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.

நெஞ்செரிச்சல்தானே…….தன்னால் சரியாகிவிடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தப் பிரச்சனை உணவுக் குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். காரணம், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம்.

உடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை. முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது. தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களை திருப்திப்படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம். மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.

அவசரம் அவசரமாக சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகையால், உணவை நன்றாக மென்று, நிதானமாக விழுங்குங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களின் உடல் எடை அதிகரிப்பால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா!
Next articleவற்றாத செல்வத்தை பெற வேண்டுமா?அரிசியில் இப்படி செய்தால் செல்வம் சேரும்!