பிட்(டத்தில்) உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

0

பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும். ஆனால் பிட்டத்தில் வரும் பருக்கள் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இப்பிரச்சனை ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும்.

பொதுவாக பருக்களானது, அதிக வியர்வையால் சருமத்துளைகளினுள் எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தேங்கி வரும். பிட்டத்தில் பருக்கள் வருவதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன. அதில் சில க்ரீம்களால் ஏற்படும் அலர்ஜி, பாக்டீரியல் தொற்றுகள் போன்றவற்றாலும் வரும்.

மேலும் இறுக்கமான உடையை அணிவதால், பிட்டப்பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருந்து, சருமத்தால் சுவாசிக்க முடியாமல் போய், அதன் விளைவாக வலிமிக்க பருக்களை உண்டாக்கும். சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பிட்டத்தில் பருக்கள் வரும்.

முக்கியமாக நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதாலும், பிட்டத்தில் அசிங்கமான மற்றும் வலிமிக்க பருக்கள் வரும். அதோடு ஷேவிங் மற்றும் வேக்ஸிங்க் செய்வதாலும் பருக்கள் எழக்கூடும். இப்படி பிட்டத்தில் வரும் பருக்களைப் போக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் சிறப்பான மற்றும் அனைவரும் எளிதில் மேற்கொள்ளக்கூடியவாறான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தயிர் மற்றும் மஞ்சள்

* 1 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து, பிம்பிள் உள்ள பிட்டப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும்.

* இந்த செயல்முறையை வாரத்திற்கு 3 முறை மேற்கொண்டால், பிட்டத்தில் இருக்கும் பருக்கள் வேகமாக போய்விடும்.

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

* 1 டேபிள் ஸ்பூன் தயிரில், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பிட்டப் பகுதியை வெதுவெதுப்பான நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை பஞ்சுருண்டையின் உதவியுடன் பிட்டப்பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* பின் குளிர்ந்த நீரால் பிட்டப்பகுதியைக் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் ஒருமுறை செய்து வந்தால், பிட்டத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.

தயிர் மற்றும் தேன்

* 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து, பிம்பிள் உள்ள பிட்டப் பகுதியில் தடவி, சில நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.

* பின் அப்பகுதியை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை அடிக்கடி செய்து வர, பிட்டத்தில் இருக்கும் பருக்களை சீக்கிரம் போக்கலாம்.

தயிர் மற்றும் ஓட்ஸ்

* 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, பிட்டத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்ய பிட்டத்தில் உள்ள பருக்கள் போய்விடும்.

ஆலிவ் ஆயில்

1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை பிட்டப் பகுதியில் தடவி 1 நிமிடம் மசாஜ் செய்து, பின் சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை பிட்டத்தில் மேல் சிறிது நேரம் வைத்து, பின் சுத்தமான துணியால் பிட்டத்தைத் துடைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்ய, சீக்கிரம் பருக்கள் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, பருக்கள் உள்ள பிட்டத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தாலே பருக்களை போக்கிவிடலாம்.

டீ-ட்ரீ ஆயில்

1 டீஸ்பூன் டீ-ட்ரீ ஆயிலுடன் 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி பிட்டப்பகுதியில் தடவி சில நிமிடங்கள் காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பின்பற்ற, பருக்கள் வராமல் தடுக்கலாம்.

பூண்டு

* 4-5 பூண்டு பற்களை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்கள் உள்ள பிட்டத்தில் தடவி 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், பிட்டப் பருக்கள் விரைவில் மறைந்துவிடும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை ஒருவர் தினமும் பருக்கள் உள்ள பிட்டப் பகுதியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் பிட்டத்தைக் கழுவ வேண்டும்.

அன்னாசி சாறு

1 டீஸ்பூன் கடற்பாசி பொடியுடன், 1/2 டீஸ்பூன் அன்னாசி சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பிட்டப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள பிட்டம் பருக்களின்றி மென்மையாக இருக்கும்.

வேப்பிலை எண்ணெய்

1 டீஸ்பூன் வேப்பிலை எண்ணெயை பருக்கள் உள்ள பிட்டத்தில் தடவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 5-6 முறை செய்து வந்தால், பிட்டத்தில் உள்ள பருக்கள் மாயமாய் மறையும்.

கொக்கோ வெண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெயை பிட்டத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20-25 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த இயற்கை வழியை தினமும் ஒருமுறை செய்து வந்தால், விரைவில் பிட்டப் பருக்கள் அகலும்.

பேக்கிங் சோடா

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, பருக்கள் இருக்கும் பிட்டத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும். இந்த செயல்முறையை தினமும் ஒருமுறை செய்ய சீக்கிரம் பருக்கள் போய்விடும்.

ஓட்ஸ், மஞ்சள் தூள் மற்றும் தயிர்

1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பிம்பிள் உள்ள பிட்டத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் 5 நிமிடம் ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, பிட்டப் பருக்கள் போய்விடும்.

சந்தனம் மற்றும் மஞ்சள்

1 டீஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, நீர் கலந்து பேஸ்ட் செய்து, பிட்டத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் நீரால் பிட்டப் பகுதியைக் கழுவுங்கள். இச்செயலை தினமும் ஒருமுறை செய்ய பருக்கள் மறைந்துவிடும்.

ஆட்டுப் பால் மற்றும் கல் உப்பு

1/2 கப் ஆட்டுப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி பிட்டத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய பருக்கள் அகலும்.

தக்காளி மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் சேர்த்து கலந்து, பிட்டத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை செய்ய பிட்ட பருக்கள் வேகமாக மறைந்துவிடும்.

கேரட் ஜூஸ் மற்றும் எலுமிச்சை சாறு

1 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் உடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி பருக்கள் உள்ள பிட்டத்தில் தடவி காய வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் 1 முறை செய்து வர சீக்கிரம் பருக்கள் போய்விடும்.

டார்டர் க்ரீம்

1 டேபிள் ஸ்பூன் டார்டர் க்ரீமுடன் 8 அவுன்ஸ் நீர் சேர்த்து கலந்து குடித்தால், உடலினுள் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இதனால் பிட்டத்தில் மட்டுமின்றி, உடலின் எந்த பகுதியிலும் பருக்கள் வராமல் இருக்கும்.

அஸ்பிரின் மாத்திரை

4-5 அஸ்பிரின் மாத்திரையை பொடியாக்கி, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, பருக்கள் உள்ள பிட்டப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, பருக்கள் சீக்கிரம் மறையும்.

ஐஸ் கட்டி

பிட்டத்தில் உள்ள பருக்கள் பயங்கரமாக வலியை ஏற்படுத்தினால், ஐஸ் கட்டியைக் கொண்டு அப்பகுதியை மசாஜ் செய்யுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைப்பதுடன், பருக்களின் வீக்கமும் குறைந்து மறைந்துவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களில் யார் ஆண் ராசிக்காரர்கள் யார் பெண் ராசிக்காரர்கள் தெரியுமா?
Next articleஉடல் எடையைக் குறைத்து, வியக்க வைக்கும் பலன்கள் தரும் குடம்புளி!