vellerukku payangal வெள்ளெருக்கு பயன்கள் vellerukku maruthuva payangal வெள்ளெருக்கு மருத்துவ பயன்கள் vellerukku mooligai payangal, வெள்ளெருக்கு மூலிகை பயன்கள். vellerukku payangal வெள்ளெருக்கு இலை, வெள்ளெருக்கு பால், எருக்கன், எருக்கு, எருக்கன் செடி, எருக்கன் இலை, vellerukku benefits in tamil, Calotropis health benefits. வெள்ளெருக்கம் பூ, எருக்கஞ்செடி பால். vellerukku Vinayagar, Patti Vaithiyam, siddha vaithiyam.

வெள்ளெருக்கு மூலிகை செடியின் மருத்துவ பயன்கள்
”எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது”
என்பது ஒரு சித்தர்பாடல் ஆகும்.
புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளெருக்கு பொதுவாக வெற்றுக் காணிகளிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும். இவை நெடியுடன் கூடிய மணம் உடைய கருஞ்சிவப்பு அல்லது வெள்மை நிற மலர்கள் ஆகும். இச்செடியின் மலர்கள், இலைகள், வேர்ப்பட்டை மற்றும் லேடக்ஸ்பால் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.
தோல் சார் நோய்கள், படை மற்றும் கொப்புளங்கள் போன்ற நோய்களிற்கு இவ்விலைகளின் தூளினை எண்ணெயில் கொதிக்க வைத்து பூசலாம். வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுக்களின் மேல் இதன் வதக்கிய இலைகளினை வைத்து கட்டுதல் மிகச் சிறந்த பலனளிக்கும்.
இதன் இலையானது, நஞ்சகற்றல்;, வாந்தியினை ஏற்படுத்தல்;, பித்தம் உண்டாக்குதல், உடலிலுள்ள வீக்கம் அதாவது கட்டிகளைக் கரைத்து வலியினைக் குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. கோழை நீக்குதல்;, பசியினைத் தூண்டுதல், முறைநோயினை இல்லாது செய்தல் போன்றனவற்றில், பால் புண்ணுண்டாக்கும் தன்மையுடைய இதன் பூ மற்றும் பட்டை ஆகியன முக்கிய பங்காற்றுகின்றன.
ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி போன்றனவற்றினை நீக்குவதில் வெள்ளெருக்கம்பூ சிறந்தது. எவ்வாறாயினும், பொதுவாக குப்பைமேடுகள் மற்றும் வெற்றுக் காணிகளில் காணப்படும் எருக்கன் செடியை நாம் விஷசெடி என்று தள்ளி வைக்கின்றோம்;. ஆனால், எண்ணற்ற மருத்துவ குணங்களை உடைய எருக்கன் செடியில் பூக்கும் பூக்கள் விஷக்கடி விரட்டும் மருந்தாக பயன்படுவதோடு சிறுநீரகம் சார் கோளாறுகளையும் மூன்றே நாட்களில் நிவர்த்தி செய்யும்;.
பால்வினை சார் வியாதிகள் விலகும்
இவ்விலைகளின் கலவையானது காய்ச்சலை குணப்படுத்துவதோடு, வெண்மை நிறத்தினை உடைய பால்போன்ற லேடக்ஸ் கருச்சிதைவினையும் ஏற்படுத்தக் கூடிய தன்மையுடையது. அதாவது, சிறுகுச்சி ஒன்றினை எடுத்து லேடக்ஸ் பாலில் தேய்த்து அதனை கருப்பை வாயில் தடவினால் கருப்பை சுருக்கம் அடைந்து கருச்சிதைவு ஏற்படும்.
இதன் மலர்கள் இலகுவான சமிபாட்டிற்கும், வயிற்று வலியினை நீக்குவதுடன், சளி, பசியின்மை, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றினையும் நீக்கும் திறன்கொண்டவை ஆகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்களிற்கு இதன் மலர்களை வெயிலில் காயவைத்து அதனை சர்க்கரையுடன் சேர்த்து மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது.
இவ் எருக்கில் பொதுவாக வெள்ளெருக்கு, ராம எருக்கு, நீல எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் காணப்படுகின்றன என சித்தவைத்தியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். எருக்கஞ்செடியானது மிக நீண்ட காலம் அதாவது ஏறத்தாள 12 வருடங்கள்; மழையின்றி காணப்படினும்; கூட, சூரிய ஒளியிலுள்ள நீரை சேகரித்து வளரும் தன்மை உடையதுடன், பொதுவான அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளரும்;. இவற்றில் மிகச்சிறப்புடையது வெள்ளெருக்கு ஆகும். இதனை பொதுவாக வீட்டிலும் வளர்க்க முடியும்;.
வேர்ப்பட்டை பயன்கள்
வேர்ப்பட்டையானது உடலிலுள்ள சுரப்பிகளின் செயற்பாட்டினைத் தூண்டுவதுடன் தோல் சார் நோய்கள், தோலடி நீர்கோர்வை, வயிற்றுப் புழுக்கள், யானைக்கால் நோய் மற்றும் அடிவயிறு வீங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு சிறந்த நோய் நீக்கியாக திகழ்கின்றது. வேர்ப்பட்டையின் மேலுள்ள கார்க் போன்ற பகுதியினை நீக்கிவிட்டு பட்டையினை அரைத்து அதனை பழைய கஞ்சியுடன் கலந்து பசை தயாரித்து யானைக்கால் நோயின் பாதிப்பிற்குள்ளான கால் மற்றும் விரல் பகுதிகளின் மீது பூசுதல் மிகச்சிறந்த பலன் தரும்.
நீண்டகாலமாக காணப்படும் மூட்டுவலி, தொழுநோய், வயிற்றுப்போக்கு, பால்வினை நோயகள்; மற்றும் பால்வினை நோய் மூலம் ஏற்பட்ட புண்கள் போன்றனவற்றினைக் குணமாக்குவதில் வேர்ப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனைவிட, தலையின் படை மற்றும் மூல வியாதியினை நீக்குவதற்கு இதன் பால்போன்ற சாறு பயன்படுத்தப்படுகின்றது. மேலும், வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு இதனை தேனுடன் கலந்து பருகுவதுடன், பற்சொத்தை மூலம் ஏற்படும் பல்வலியினை நீக்குவதற்கு பஞ்சில் தோய்த்து மருந்தாகவும் வழங்கப்பட்டுவருகின்றது.
மஞ்சள் காமாலை வியாதி நீங்கும்
ஏற்கனவே கூறியது போல, வேர்ப்பட்டையின் தூளானது வாந்தியினை ஏற்படுத்தக்கூடியதுடன், நீண்ட கால மூட்டுவலி மற்றும் மஞ்சள் காமாலைக்கு இதனை மிளகுடன் சேர்த்து நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் வழங்கப்படுகின்றது. மேலும், ஒரே வாரத்தில் மஞ்சள் காமாலை நீங்குவதற்கு பால் திரிந்த பின்னர் மேலே உள்ள நீருடன் சோடியம் கார்பனேட் சேர்த்து வழங்குதல் சிறந்த பலனைத்தரும்.
இவ்வாறாக மருந்து தயாரிக்கும் போது மிகவும் வயதான தாவரத்தின் வேரினை உலர் அல்லது வெப்பமான காலத்தில் பிரித்தெடுக்க அவசியம்;. இங்கு, வேரினை தோண்டியதும் உடனே பட்டையினை பிரித்தெடுக்காமல் ஒரு நாள் கழித்தே அதாவது மறுநாளே அதனை எடுத்தல் வேண்டும். மேலும், வேர்ப்பட்டை பொடியினை தயாரிப்பதற்கு முன் பட்டையின் மேல் புறத்திலுள்ள தடித்த கடினமான கார்க் போன்ற பகுதியினை முதலில் சுரண்டி எடுத்துவிடுதல் வேண்டும்.
Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
Article By: Tamilpiththan