இன்றைய ராசி பலன் 31.10.2021 Today Rasi Palan 31-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் – 31.10.2021

இன்று 31-10-2021 ஐப்பசி மாதம் 14 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று தசமி திதி பகல் 02.27 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. மகம் நட்சத்திரம் பகல் 01.16 வரை பின்பு பூரம். இன்றூ மரணயோகம் பகல் 01.16 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் செய்ய நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகளால் உடல் சோர்வும் மருத்துவ செலவுகளும் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு எதிர்பாராத ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுக படுத்துவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிட்டும்.

சிம்மம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

கன்னி ராசிக்காரர்களே!

இன்று வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பெரியவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.

துலாம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக வெளி வட்டார நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு ராசிக்காரர்களே!

இன்று வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீட்டு பராமரிப்பிற்காக செலவுகள் செய்ய நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம் ராசிக்காரர்களே!

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.

கும்பம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு உயரும்.

மீனம் ராசிக்காரர்களே!

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு லாப குரு மாற்றத்தால் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வர இருக்கிறது.
Next articleதிசை திரும்பும் குருவின் பார்வையும்! கிரகங்களின் இடமாற்றத்தால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்!