Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 30.2.2022 Today Rasi Palan 30-12-2022 Today Tamil Calander Indraya Rasi...

இன்றைய ராசிபலன் 30.2.2022 Today Rasi Palan 30-12-2022 Today Tamil Calander Indraya Rasi Palan

0
358

இன்று 30-12-2022 மார்கழி மாதம் 15ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று அஷ்டமி திதி மாலை 06.34 வரை பின்பு வளர்பிறை நவமி. இன்று உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 11.24 வரை பின்பு ரேவதி. இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை 10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

Previous articleபலரது கணிப்பு- ஒருசில அறிகுறிகளை வைத்து ஆண்கள் இதை புரிந்து கொள்ளலாம்
Next articleநடிகை ராஷி கண்ணா photos collection.