இன்றைய ராசி பலன் 29.06.2022 Today Rasi Palan 29-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 29-06-2022 ஆனி மாதம் 15ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று அமாவாசை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. இன்று திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு புனர்பூசம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம் ராசிக்காரர்களுக்கு: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் வேலையாட்களின் பொறுப்பான செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு: இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரித்தாலும் சற்று பார்த்து பழகுவது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு: இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. குடும்பத்தில் பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு: இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு: இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு: இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு: இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு: இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு: இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு: இன்று நீங்கள் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

மீனம் ராசிக்காரர்களுக்கு: இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 28.06.2022 Today Rasi Palan 28-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleகுருவின் வக்கிர பெயர்ச்சி! மகாலட்சுமி யோகத்தால் பேரதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்