இன்றைய ராசி பலன் 28.01.2022 Today Rasi Palan 28-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 28-01-2022 தை மாதம் 15ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். ஏகாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் காலை 07.10 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 07.10 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். இன்று பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. தனிய நாள். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை 10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசிக்காரர்கள்:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.

மிதுனம் ராசிக்காரர்கள்:

இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். சிக்கனமுடன் செயல்படுவதால் குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

கடகம் ராசிக்காரர்கள்:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். நண்பர்கள் உதவியால் கடன்கள் பைசல் ஆகும்.

சிம்மம் ராசிக்காரர்கள்:

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி ராசிக்காரர்கள்:

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமான காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

துலாம் ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம் ராசிக்காரர்கள்:

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்கள்:

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

மகரம் ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம் ராசிக்காரர்கள்:

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். கடன் பிரச்சினை குறையும்.

மீனம் ராசிக்காரர்கள்:

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுப்பது வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் அதிஸ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள்! விபரீத ராஜயோகங்கள் காத்திருக்கின்றது.
Next articleஇன்றைய ராசி பலன் 29.01.2022 Today Rasi Palan 29-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!