Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 25.01.2022 Today Rasi Palan 25-01-2022 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 25.01.2022 Today Rasi Palan 25-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
364

இன்று 25-01-2022 தை மாதம் 12ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். சப்தமி திதி காலை 07.49 வரை பின்பு அஷ்டமி திதி. சித்திரை நட்சத்திரம் பகல் 10.54 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று லக்ஷ்மி நரசிம்மர்- பைரவர் வழிபாடு நல்லது. இன்று வாஸ்து நாள். காலை 10.46 மணி முதல் 11.22 மணி வரை. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம் ராசிக்காரர்களுக்கு!

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு!

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு!

இன்று தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு!

இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு!

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு!

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு!

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு!

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு!

இன்று எதிர்பாராத வகையில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு!

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

Previous articleஇந்த ராசியில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அப்பாக்களிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்களாம்!
Next articleஇவற்றை வீட்டில் செய்துவந்தால் கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டுமாம்! பணமழையில் நனையலாம்!