இன்றைய ராசி பலன் 24.04.2022 Today Rasi Palan 24-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 24-04-2022 சித்திரை மாதம் 11 ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று நவமி திதி பின்இரவு 02.53 வரை பின்பு தேய்பிறை தசமி. திருவோணம் நட்சத்திரம் மாலை 05.52 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 05.52 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். நண்பர்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். தூரப் பயணங்களினால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த உதவி எளிதில் கிட்டும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். வியாபார முன்னேற்றத்திற்காக வங்கி மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 22.04.2022 Today Rasi Palan 22-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஏப்ரல் 25 முதல் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது