Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 24.02.2022 Today Rasi Palan 24-02-2022 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 24.02.2022 Today Rasi Palan 24-02-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
404

இன்று 24-02-2022 மாசி மாதம் 12ம் நாள் வியாழக்கிழமை ஆகும். அஷ்டமி திதி பகல் 03.04 வரை பின்பு தேய்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 01.30 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 01.30 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று பைரவர் வழிபாடு நல்லது. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசிக்காரர்கள்:

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்கள்:

இன்று உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்தி இருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம் ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம் ராசிக்காரர்கள்:

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

சிம்மம் ராசிக்காரர்கள்:

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்கள்:

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்கள்:

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பயணங்கள் மூலம் சாதகமான பலனை அடைவீர்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்கள்:

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த விண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.

தனுசு ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம் ராசிக்காரர்கள்:

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

கும்பம் ராசிக்காரர்கள்:

இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

மீனம் ராசிக்காரர்கள்:

இன்று தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.

Previous articleஇன்று முதல் மகர ராசிக்குள் உதிக்கும் சனி பகவானால் இன்று முதல் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிகள்!
Next articleமகாசிவராத்திரியில் இருந்து இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் நல்ல காலம் ஆரம்பிக்கிறது! அதிஸ்டம் தேடி வரும் காலம்!