இன்று 23-03-2021 பங்குனி மாதம் 10ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். நவமி திதி பகல் 10.07 வரை பின்பு வளர்பிறை தசமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10.45 வரை பின்பு பூசம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இன்று முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்: இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.
ரிஷபம்: இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
மிதுனம்: இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்: இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.
சிம்மம்: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.
கன்னி: இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
துலாம்: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
விருச்சிகம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 04.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனம் தேவை.
தனுசு: இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.30 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்: இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்: இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத பண நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்: இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.