இன்றைய ராசிபலன் 22.11.2022 Today Rasi Palan 22-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 22-11-2022 கார்த்திகை மாதம் 06ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று திரியோதசி திதி காலை 08.50 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. இன்று சுவாதி நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு விசாகம். இன்று சித்தயோகம் இரவு 11.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று மாத சிவராத்திரி விரதம். இன்று லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.

இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Today Rasi Palan 22-11-2022

மேஷம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். எடுக்கும் காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியான பயணங்களில் கவனம் தேவை.

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண் விரயங்களும் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். எதிர்பாராத உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் அதிகாரிகளிடம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக பகை குறையும். வருமானம் பெருகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் நண்பர்கள் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் வகையில் சிறு மன கவலைகள் ஏற்படும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு: இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 6 ராசிக்காரர்களுக்கும் 2023ல் பணக்காரர்கள் ஆகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியும் இதில‌ இருக்கா!
Next articleகும்ப ராசிக்கு செல்லும் சனியால் ஏற்படப்போகும் சசயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களிற்கு 2023 அதிக நன்மையும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.