Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 21.12.2021 Today Rasi Palan 21-12-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 21.12.2021 Today Rasi Palan 21-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
362

இன்று 21-12-2021 மார்கழி மாதம் 06ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று துதியை திதி பகல் 02.54 வரை பின்பு தேய்பிறை திரிதியை. இன்று புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10.25 வரை பின்பு பூசம். இன்றைய‌ நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று முருக வழிபாடு நல்லது. இன்று கரி நாள் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

மிதுனம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு உறவினர்கள் வருகையால் மன நிம்மதி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

கன்னி ராசிக்காரர்களே!

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

விருச்சிகம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

தனுசு ராசிக்காரர்களே!

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

மகரம் ராசிக்காரர்களே!

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.

கும்பம் ராசிக்காரர்களே!

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மீனம் ராசிக்காரர்களே!

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

Previous article30 வருடங்களுக்கு பின் உக்கிர சனியின் அதிசார வக்ர பெயர்ச்சியால் நன்மை தீமைகளை பெறும் ராசிக்காரர்கள் யார்!
Next article2022ல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றப்போகும் குரு பகவான்! செல்வமும், புகழும் தேடி வருவதால் வாழ்வில் உயர்வடையப்போகும் ராசிக்காரர்கள்!