Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 21.02.2022 Today Rasi Palan 21-02-2022 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 21.02.2022 Today Rasi Palan 21-02-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
470

இன்று 21-02-2022 மாசி மாதம் 09ம் நாள் திங்கட்கிழமை ஆகும். பஞ்சமி திதி இரவு 07.58 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சித்திரை நட்சத்திரம் மாலை 04.16 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் மாலை 04.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம்12.00-01.00, மதியம் 3.00-4.00, மாலை 06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.

கடகம்

இன்று தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த நெருக்கடிகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியான புதிய முயற்சிகள் வெற்றி பெறும்-.

கும்பம்

இன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

Previous articleகுருவின் அஸ்தமனத்தால் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!
Next articleகுருவும், சூரியனும் சனியின் ராசிக்குள் புகுந்து பயணிப்பதால் இந்த 5 ராசிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!