Today Rasi Palan 21-01-2020 இன்றைய ராசி பலன் 21.01.2020 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Today Calendar 21/01/2020 Tuesday

0

Today Rasi Palan 21-01-2020:

Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces.

இன்றைய பஞ்சாங்கம்: 21-01-2020, தை 07, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 01.45 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 11.43 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 11.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. Today Rasi Palan 21-01-2020 tuesday.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் – 21.01.2020

மேஷம் வீம்பு வாக்குவாதம் ஏற்படும்.
ரிஷபம் ஊக்கம் ஏற்படும்.
மிதுனம் உதவி கிடைக்கும்.
கடகம் திறமை கிட்டும்.
சிம்மம் சிரமம் ஏற்படும்.
கன்னி சினம் அடைவீர்கள்.
துலாம் பரிசு கிடைக்கும்.
விருச்சிகம் செலவு ஏற்படும்.
தனுசு நன்மை ஏற்படும்.
மகரம் விவேகம் கிட்டும்.
கும்பம் பெருமை கிடைக்கும்.
மீனம் தனம் வரவு ஏற்படும்.

வைஷ்ணவ ஏகாதசி விரதம்

மேஷம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று வீண் வாக்குவாதங்களை குறைக்கவும். உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.

மிதுனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். நினைத்தது நிறைவேறும்.எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கடகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும்.

சிம்மம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். தெய்வ வழிபாடு நல்லது. உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.வேலையில் பணிச்சுமை அதிகமாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிட்டும். பணகஷ்டம் குறையும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNayapadkar Gujarati Epaper / Naya Padkar newspaper nayapadkar news nayapadkar Gujarati Newspaper
Next articleToday Rasi Palan 22-01-2020 இன்றைய ராசி பலன் 22.01.2020 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Today Calendar 22/01/2020 Wednesday