Today Rasi Palan 20.01.2020 இன்றைய ராசி பலன் – 20.01.2020 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Today calendar 20.01.2020!

0

Today Rasi Palan 20.01.2020 இன்றைய ராசி பலன் – 20.01.2020 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Today calendar 20.01.2020! Today Rasi Palan 20.01.2020

இன்றைய பஞ்சாங்கம் 20-01-2020, தை 06, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.30 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம் பொறுமை ஏற்படும்.
ரிஷபம் தோல்வி ஏற்படும்.
மிதுனம் பரிசு கிடைக்கும்.
கடகம் சுபம் கிட்டும்.
சிம்மம் வெற்றி கிடைக்கும்.
கன்னி நன்மை பெறுவீர்கள்.
துலாம் களிப்பு ஏற்படும்.
விருச்சிகம் உற்சாகம் தோன்றும்.
தனுசு சாந்தம் ஏற்படும்.
மகரம் ஜெயம் கிட்டும்.
கும்பம் துன்பம் விலகும்.
மீனம் பயம் விலகும்.

இன்றைய ராசி பலன் – 20.01.2020

மேஷம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது சிறந்தது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் ர்டுபடும் போது கவனம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சக‌ ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கடகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.

துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

விருச்சிகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மகரம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உடல் நிலை சீராகும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

கும்பம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும்.

மீனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Vinai Seyal Vagai Adhikaram-68 திருக்குறள் வினைசெயல்வகை அதிகாரம்-68 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil வினை செயல் வகை Vinai Seyal Vakai
Next articleபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு! இது தான் அந்த ரகசியம் !