இன்று 19-06-2022 ஆனி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று சஷ்டி திதி இரவு 10.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி. இன்று அவிட்டம் நட்சத்திரம் காலை 05.56 வரை பின்பு சதயம் நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு பூரட்டாதி. இன்று மரணயோகம் காலை 05.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷம் ராசிக்கு:
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவதற்கான யோகம் உண்டாகும்.
ரிஷபம் ராசிக்கு:
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.
மிதுனம் ராசிக்கு:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகமின்றி ஈடுபடுவீர்கள். கை, கால் வலி, உடல் சோர்வு போன்ற சிறு சிறு உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கடகம் ராசிக்கு:
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.
சிம்மம் ராசிக்கு:
இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.
கன்னி ராசிக்கு:
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை அளிக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
துலாம் ராசிக்கு:
இன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம் ராசிக்கு:
இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.
தனுசு ராசிக்கு:
இன்று- உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகரம் ராசிக்கு:
இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கடன்கள் குறையும்.
கும்பம் ராசிக்கு:
இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
மீனம் ராசிக்கு:
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.