இன்றைய ராசி பலன் 18.07.2022 Today Rasi Palan 18-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 18-07-2022 ஆடி மாதம் 02ம் நாள் திங்கட்கிழமை ஆகும். இன்று பஞ்சமி திதி காலை 08.55 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.23 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பகல் 12.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. இன்று கரி நாள் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம் 12.00-01.00, மதியம் 3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சுப சுபமுயற்சிகளில் இடையூறு உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎரிபொருளின் விலை குறைக்கப்படுவதற்கான சாத்தியம்.. தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
Next articleஇன்றைய ராசி பலன் 19.07.2022 Today Rasi Palan 19-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!