Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 18.03.2021 Today Rasi Palan 18-03-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 18.03.2021 Today Rasi Palan 18-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
523

இன்று 18-03-2021 பங்குனி மாதம் 05ம் நாள் வியாழக்கிழமை அகும். பஞ்சமி திதி இரவு 02.10 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பரணி நட்சத்திரம் பகல் 10.34 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 10.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.

மிதுனம்: இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள், தொல்லைகள் குறையும்.

கடகம்: இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு இன்று மாலை 05.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு பிறகு தொடங்குவது நல்லது.

துலாம்: இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.22 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்: இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

தனுசு: இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

மகரம்: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்: இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.

மீனம்: இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். வராத கடன்கள் எதிர்பாராத வகையில் வசூலாகும். வியாபார சம்பந்தமா£க எடுக்கும் முயற்சியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Previous articleதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா! மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்!
Next articleநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்!