Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 12.12.2021 Today Rasi Palan 12-12-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 12.12.2021 Today Rasi Palan 12-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
354

இன்று 12-12-2021 கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று நவமி திதி இரவு 08.03 வரை பின்பு வளர்பிறை தசமி. இன்று உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.59 வரை பின்பு ரேவதி. இன்றைய நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு!

இன்று மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு!

இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் தோன்றும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி ராசிக்காரர்களுக்கு!

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு!

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு!

இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மகரம் ராசிக்காரர்களுக்கு!

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு!

இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை நிலவும். ஆரோக்கிய பாதிப்புகளால் அன்றாட பணிகள் தடைப்படும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு!

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Previous articleதனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் பகவானால் அடுத்த 21 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
Next articleஇன்றைய ராசி பலன் 13.12.2021 Today Rasi Palan 13-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!