இன்று 07-11-2022 ஐப்பசி மாதம் 21ம் நாள் திங்கட்கிழமை ஆகும். இன்று சதுர்த்தசி திதி மாலை 04.16 வரை வளர்பிறை பின்பு பௌர்ணமி. இன்று அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு பரணி. இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். அன்னாபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். குருநானக் ஜெயந்தி. இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம் 12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம் ராசியினருக்கு:
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.
ரிஷபம் ராசியினருக்கு:
இன்று நீங்கள் எடுத்த வேலை பாதியில் தடைப்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.
மிதுனம் ராசியினருக்கு:
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.
கடகம் ராசியினருக்கு:
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
சிம்மம் ராசியினருக்கு:
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
கன்னி ராசியினருக்கு:
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது.
துலாம் ராசியினருக்கு:
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான சிக்கல்கள் விலகி மன நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம் ராசியினருக்கு:
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு ராசியினருக்கு:
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானத்துடன் செயல்படுவது உத்தமம்.
மகரம் ராசியினருக்கு:
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம்.
கும்பம் ராசியினருக்கு:
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம் ராசியினருக்கு:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைக்கும்.