இன்றைய ராசி பலன் 07.05.2021 Today Rasi Palan 07-05-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 07-05-2021, சித்திரை மாதம் 24ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். ஏகாதசி திதி பகல் 03.32 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.26 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. இன்று பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் : இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எடுக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் : இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.

மிதுனம் : இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம் : இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம் : இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி : இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

துலாம் : இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

விருச்சிகம் : இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு : இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. நெருங்கியவர்களின் உதவியுடன் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

மகரம் : இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.

கும்பம் : இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம் : இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 06.05.2021 Today Rasi Palan 06-05-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 09.05.2021 Today Rasi Palan 09-05-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!