Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 07.01.2023 Today Rasi Palan 07-01-2023 Today Tamil Calander Indraya Rasi...

இன்றைய ராசிபலன் 07.01.2023 Today Rasi Palan 07-01-2023 Today Tamil Calander Indraya Rasi Palan

0
325

இன்று 07-01-2023 மார்கழி மாதம் 23ம் நாள் சனிக்கிழமை ஆகும். இன்றைய‌ நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. இன்று புனர்பூசம் நட்சத்திரம் பின் இரவு 03.08 வரை பின்பு பூசம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம்: காலை 09.00-10.30, எம கண்டம்: மதியம் 01.30-03.00, குளிகன்: காலை 06.00-07.30, சுப ஹோரைகள்: காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம் ராசிக்காரர்களுக்கு:

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு:

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு:

இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கடகம் ராசிக்காரர்களுக்கு:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு:

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். எதிலும் புது தெம்புடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண முயற்சிகளில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு:

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம் ராசிக்காரர்களுக்கு:

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு:

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு:

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

Previous articleநடிகை ராஷி கண்ணா photos collection.
Next articleமீனம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!