Today Rasi Palan 04-02-2020 இன்றைய ராசி பலன் 04.02.2020 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Today Calendar 04/02/2020 Tuesday Indraya Rasipalan

0

Today Rasi Palan 04-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 04-02-2020 இன்றைய பஞ்சாங்கம்: 04-02-2020, தை மாதம் 21, செவ்வாய்க்கிழமை, தசமி இரவு 09.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. ரோகிணி பின் இரவு 01.49 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 01.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன் மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள் காலை 8.00 தொடக்கம் 9.00 வரை
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 08.00 வரை, 10.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் வரவு கிடைக்கும்.
ரிஷபம் தாமதம் ஏற்படும்.
மிதுனம் செலவு ஏற்படும்.
கடகம் நோய் ஏற்படும்.
சிம்மம் வெற்றி கிடைக்கும்.
கன்னி துன்பம் குறையும்.
துலாம் நன்மை கிடைக்கும்.
விருச்சிகம் அமைதி உண்டாகும்.
தனுசு பக்தி உண்டாகும்.
மகரம் பயம் ஏற்படும்.
கும்பம் கவலை ஏற்படும்.
மீனம் மேன்மை ஏற்படும்.

இன்றைய ராசி பலன் 04.02.2020

மேஷம் ராசி அன்பர்களே!
தொழில் ரீதியான பயணங்களில் வெற்றிகரமான‌ பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சாதகமாக‌ பலன் கிட்டும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ரிஷபம் ராசி அன்பர்களே!
பாடசாலைக்கால‌ நண்பர்களின் சந்திப்பு சந்தோசத்தை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வகையில் நல்ல‌ லாபம் ஏற்படும். நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். சோகோதரர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மிதுனம் ராசி அன்பர்களே!
தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்லபடியாக அமையும். பணவரவு சிறப்பாக அமைவதால் தேவைகள் நிறைவேறும். வேலைத்தலத்தில் பணிச்சுமை குறைவடையும். குடும்பத்தில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைவடைவ‌தால் தென்பு ஏற்படும்.

கடகம் ராசி அன்பர்களே!
வியாபாரத்தில் ஏற்பட்டுவந்த‌ போட்டி பொறாமைகள் குறைவடையும். உத்தியோக ரீதியான பயணங்களின் மூலம் வெளியிடத்து நட்பு கிட்டும். குடும்பத்தில் தாராளமான‌ தனவரவு ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம் ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் ஏனையவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் நிறைவேறும். வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருப்பதோடு பழைய கடன்கள் குறையும். தொழில் சம்பந்தமான‌ பயணம் செல்ல நேரிடும்.

கன்னி ராசி அன்பர்களே!
தொழில் ரீதியான முயற்சிகளுக்கு குடும்பத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு செய்வதால் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி காணப்படுவார்கள்.

துலாம் ராசி அன்பர்களே!
வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் செல்லவும். நீங்கள் சற்று குழப்பமாகவே இருப்பீர்கள். இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலையும் கவனத்துடன் செய்வது நன்மை.

விருச்சிகம் ராசி அன்பர்களே!
அரசு வழியில் கிடைக்கவிருந்த‌ உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும்.

தனுசு ராசி அன்பர்களே!
கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்‍. குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோசமும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு லாபத்தை அடைவீர்கள்.

மகரம் ராசி அன்பர்களே!
திருமணம் போன்ற சுப‌ முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும்.

கும்பம் ராசி அன்பர்களே!
வெளியிடத்து பயணங்களால் அலைச்சல் மற்றூம் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்புக்கள் மூலம் புது தென்பு ஏற்படும். இன்று செய்யும் காரியங்கள் அனைத்திலும் தடைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

மீனம் ராசி அன்பர்களே!
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த‌ உதவி இன்று கிடைக்கும். வழக்கு சம்பந்தமான‌ விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கும். உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகி மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ராசி பலன் ஜோதிடம்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Pugazh Adhikaram-24 திருக்குறள் புகழ் அதிகாரம்-24 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleToday Rasi Palan 05-02-2020 இன்றைய ராசி பலன் 05.02.2020 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Today Calendar 05/02/2020 Wednesday Indraya Rasipalan