இன்றைய ராசி பலன் 01.04.2021 Today Rasi Palan 01-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 01-04-2021 பங்குனி மாதம் 19ம் நாள் வியாழக்கிழமை ஆகும். சதுர்த்தி திதி பகல் 11.00 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. விசாகம் நட்சத்திரம் காலை 07.21 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின் இரவு 05.19 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 05.19 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று கரி நாள். இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம்: இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்: இன்று வெளிப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

சிம்மம்: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கன்னி: இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

துலாம்: இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.

தனுசு: இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மகரம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிலில் மந்த நிலை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்: இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

மீனம்: இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 30.03.2021 Today Rasi Palan 30-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleவாழ்க்கை முழுதும் 12 ராசிக்காரர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும் என‌ தெரிந்து கொள்ளுங்கள்!