Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan சனிக்கிழமை இன்றைய ராசிப்பலன் – 19.10.2019 !

Today Rasi Palan சனிக்கிழமை இன்றைய ராசிப்பலன் – 19.10.2019 !

0
566

இன்றைய பஞ்சாங்கம்
19-10-2019, ஐப்பசி 02, சனிக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.44 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.40 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் – மதியம் 01.30-03.00, குளிகன் -காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.

ரிஷபம்
இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நெருங்கிவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.

கன்னி
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பணிச்சுமை குறையும்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

தனுசு
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளும் விலகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்
இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

Previous articleஉலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா? யார் அந்த சிறுவன் தெரியுமா?
Next articleவிளையாட்டு கதைக்களத்தில் விஜய்க்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ் !