Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 06.10.2019

Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 06.10.2019

0
497

இன்றைய பஞ்சாங்கம்
06-10-2019, புரட்டாசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.54 வரை பின்பு வளர்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் பிற்பகல் 03.03 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பிற்பகல் 03.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா நவமி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்
இன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம்
இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கன்னி
இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.

விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

தனுசு
இன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும்.

மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

கும்பம்
இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

மீனம்
இன்று பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

Previous articleகைகளை இணைக்கும் போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா? இத படிங்க புரியும்!
Next articleவார ராசிப்பலன் – அக்டோபர் 6 முதல் 12 வரை !