Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 18-12-2019 இன்றைய ராசி பலன் !

0

இன்றைய பஞ்சாங்கம் 18-12-2019
மார்கழி 02
புதன்கிழமை
சப்தமி திதி இரவு 11.31 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
பூரம் நட்சத்திரம் இரவு 12.00 வரை பின்பு உத்திரம்.
நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் – 18.12.2019

மேஷம்: வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உறவினர்களால் அனுகூலம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.

ரிஷபம்: சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு ஏற்ப நற்பலன்கள் உண்டாகும்.

மிதுனம்: உங்கள் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சேமிப்பு உயரும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கடகம்: உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும்.

சிம்மம்: உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

கன்னி: உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும்.

துலாம்: பொன் பொருள் சேரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

தனுசு: வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவ அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பணிச்சுமை குறையும். உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

மகரம்: உத்தியோகத்தில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

கும்பம்: பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

மீனம்: உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2020 ம் ஆண்டு பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா?
Next articleThirukkural Ozhukkam Udaimai Adhikaram-14 திருக்குறள் ஒழுக்கமுடைமை அதிகாரம்-14 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil