Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 14-12-2019 இன்றைய நாளுக்கான‌ ராசி பலன் !

Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 14-12-2019 இன்றைய நாளுக்கான‌ ராசி பலன் !

0
1206

இன்றைய பஞ்சாங்கம் 14-12-2019

கார்த்திகை 28
சனிக்கிழமை
துதியை திதி காலை 08.47 வரை பின்பு தேய்பிறை திரிதியை.
புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி ப்ரீதி நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.

இன்றைய நாளுக்கான‌ ராசி பலன் – 14.12.2019

மேஷம்: குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.வங்கி சேமிப்பு உயரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.

ரிஷபம்: சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம் : தொழிலில் பணியாட்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் : சுபகாரியங்கள் கைகூடும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

சிம்மம்: மனதில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

கன்னி: தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

துலாம்: தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பது நல்லது. இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பணி சுமையால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

விருச்சிகம்: உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

தனுசு: நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகள் செய்யும் வாய்ப்பு அமையும். புதிய பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.

மகரம்: வங்கி மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கும்பம்: உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். சுபகாரியங்கள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

மீனம்: எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம்.

Previous article39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
Next articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 15-12-2019 இன்றைய ராசி பலன் !