29-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 29-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 29-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 29.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 29/6/20, Today News in Tamil 29.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

குவைத்தில் இருந்து நாட்டிற்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் எட்டுகால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி, ஆனால் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“மலையக மக்களை நான் இருக்கும்வரை எவரும் சீண்ட முடியாது” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கருத்து.

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது” வாசுதேவ நாணயக்கார கருத்து.

“எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது” வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து.

“தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்” எம்.ஏ.சுமந்திரன் கருத்து.

“காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என்பது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையென்றால், அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் கேள்வி?

Tamil News Today India

பெட்ரோல், டீசல் விலை இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.59-ம், டீசல் ரூ.77.61-ம் விற்பனை.

சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் தந்தை, மகன் ஆகியோரின் மரண வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைப் பிரிவுக்கு மாற்றவுள்ளதாக‌ முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து.

“இந்திய தாய் நாட்டின் மீது அந்நியர்கள் கை வைக்க முடியாது” – பிரதமர் நரேந்திர மோடி.

சீரற்ற வானிலையால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 2 இலட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிப்பு, 16 பேர் உயி(ரி)ழப்பு.

“சாத்தான்குளம் சம்பவத்தில் நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை”- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

லடாக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனப் போர் விமானங்கள், ஹெலிக்கொப்டர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tamil News Today World

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மற்றுமொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்கு.! இவர் உட்பட நான்கு பேருக்கு பிடியாணை.!

கருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்துள்ளது.

சிரியா, ஈரான் எல்லைக்கு அருகே சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 06 போராளிகள் உயி(ரி)ழப்பு.

உலகில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் போது ஆக்சிஜன் தேவையும் அதிகமாகிறது, இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

Tamil News Live

அதிபர் டிரம்ப் உட்பட யாராக இருந்தாலும் உள்ளூர் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்த தவறான தகவல்கள் பதிவு முடக்கப்படும், அல்லது தவறானவை என குறியீடு செய்யப்படும்.- பேஸ்புக் அதிரடி அறிவிப்பு.

வனிதா திருமணம் செய்த பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி பொலிஸில் பீட்டர் மீது புகார், தனக்கு சட்ட ரீதியான விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை திருமணம் செய்துள்ள‌தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Today News Tamil – Tamil News Today 29-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 29.06.2020 Today Rasi Palan 29-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி…!