25-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 25-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 25-08-2020

Today Tamil News India

“நண்பனான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை இழந்தமையினால் நிறைய இழந்து விட்டேன்” பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவிப்பு.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பு.

ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியில் 82 வயதான மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் வீட்டிலிருந்து 2 தற்கொலைப்படை அங்கிகள், ஒரு பெல்ட், 9 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் மீது 359 மீட்டர் உயரத்தில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.‌

சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

“இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பு.

அருணாச பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவிப்பு.

Today Live News Srilanka

இலங்கையில் புகையிலைச் சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள்” எனக்கூறி மட்டக்களப்பு கொம்மாதுரையில் படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக அரச நிறுவனங்களில் அடுத்த மாதம் 2 ஆம் திகதி இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்.!

மன்னாரில் இளம் பெண் கொ(லை) தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்களுக்கு விளக்கமறியல்.!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்பட்ட‌ நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

Today News World

கலிபோர்னியாவில் காட்டுத் தீ…வார இறுதியில் மின்னல் தாக்கும் எனவும் எச்சரிக்கை.!

பெருவில் ஊரடங்கு உத்தரவையும் மீறி நடத்தப்பட்ட கேளிக்கை கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 13 பேர் உயிரிழப்பு.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கோமா நிலையில் இருப்பதாக தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சோங் மின் தெரிவிப்பு.

அதிகரித்து வரும் வெப்பத்தால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்பு..!

தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயி(ரிழ)ப்பு.

Today News Live

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிரான்ஸின் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, தோல்வியடைந்ததால் ரசிகர்கள், தலைநகர் பரிஸில் வன்முறையில் ஈடுபட்ட‌னர்.

நடிகர் சந்தானம் நடிப்பில் “டிக்கிலோனா” திரைப்படத்தின் ட்ரெய்லர் 60 இலட்சம் பார்வையாளர்களை கடந்ததுள்ளது.

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், பிரபல இயக்குனருமான ஆண்டனி பாஸ்கர் ராஜ்(95) காலமானார்.

Today News In Tamil 25.08.2020, Tamil News Live 25 08 2020, Today Popular News Tamil 25.8.20, Today Trending News Tamil 25-08-20, Today News In Tamil Live 25/08/2020, Today Tamil News In Sri Lanka 25.08.20, Today Tamil News In India 25-08-20, Indraya Mukkiya Seithigal 25/08/20, Indraya Thalaippu Seithigal 25.08.2020, Today Cinema News Tamil 25/8/20, Today Breaking News In Tamil 25 08 2020, Today Headlines Tamil August-25, News Live Today Tamil 25-08-20, Daily Live News Update 20-08-25, 25-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 25, இன்றைய முக்கிய செய்திகள் 25-08-2020, செய்திகள் 20-08-25, தமிழ் நியூஸ் 25.08.20.

Today News Tamil – Tamil News Today 25-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.08.2020 Today Rasi Palan 25-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……!