19-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 19-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 19-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 19.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 19/6/20, Today News in Tamil 19.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என இ.தொழி.காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன்.

தேயிலை ஏற்றுமதியின்போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியினை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்த அனுமதி.

மின் பாவனையார்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டணமே சரியானது, என மின்சார சபை தெரிவிப்பு.

தனியார் பேருந்துகளை கொள்வனவு செய்ய 4 சத‌வீத இலகு வட்டிக்கு கடன் பெற்றுக் கொடுக்க அமைச்சரவை தீர்மானம்.

வடமாகாண வளாச்சிக்கான விவசாய துறைகள் சார்பில் பொருத்தமான கொள்கைத் திட்டங்களை தாமதமின்றித் தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கருத்து.

யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு. யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய கருத்து.

மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல், இருவர் கைது.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்கள் வீடொன்றிற்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளை எரித்து, நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர்.

தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாக, திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை, இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து.

Tamil News Today India

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வருவதால், 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வீடுகளை விட்டு புறநகர் பகுதிகளுக்கு நகர்வு.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் குப்பை வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்களை இடைவெளியின்றி ஏற்றிச் செல்லும் அவலம்.

இந்திய ஹோட்டல்களில் சைனீஸ் உணவுகள் விற்க‌ தடை விதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து.

இந்திய , சீன எல்லையில் இடம்பெற்ற மோதலில் வீரமரணமடைந்த தமிழக வீரரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராவதற்காக உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவிப்பு.

பிஎஸ் என்எல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளில் சீனாவின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு தடை!

மகாராஷ்டிரா புலிகள் காப்பக வனப்பகுதியில் பன்றியை கொன்று, விஷம் கலந்து புலிகளுக்கு விருந்தாக்கிய கொடுமை : மதுபானம் தயாரிப்பதற்கு தொந்தரவாக இருந்ததால் இளைஞர்கள் சதி!

Tamil News Today World

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து.

வட கொரியா, தென் கொரியாவின் எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு.

ஜெர்மனியில் கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 8 நாய்கள், நடனத்தை பார்த்து வியந்துபோன கின்னஸ் அமைப்பினர்.

போர்முனையில் ரோபோவை சீனா மீண்டும் சோதனை செய்துள்ளது சர்வதேச அரங்கில் பரபரப்பு.!

Tamil News Live

30 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்து கொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைப்பு.

விஜய் டிவியின் மகாபாரத நடிகைக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பாலிவுட் நடிகரான சுஷாந்த், டாக்டர் சேதுராமன், சிரஞ்சீவி ஆகியோரின் மரணம் குறித்து சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன் நடிகர் சிம்பு கருத்து.

கால்பந்தாட்ட பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை வீரர்கள்.

Today News Tamil – Tamil News Today 19-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 18.06.2020 Today Rasi Palan 18-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 19.06.2020 Today Rasi Palan 19-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!