18-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 18-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 18-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 18.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 18/6/20, Today News in Tamil 18.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கடந்த ஏழு மாதங்களாக கொடுப்பனவு ஏதுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஹிருணிக்காவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை.!

யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேரில் மூவருக்கு பிணை!

மொனராகலை மாவட்டத்தில் ட்ரோன் கமராவின் உதவியுடன் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட‌ கஞ்சா தோட்டம், மூவர் கைது!

யாழ்ப்பாணம் மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து கவனயீர்ப்பு பேராட்டம்!

கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தும் போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக‌ கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிமன்றம் உத்தரவு.

Tamil News Today India

தமிழகத்தில் எதிர்வரும் 48 மணி நேரத்திற்கு மேற்கு மாவட்டங்களிலும் வட தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு.

சீன படையினருடன் இடம்பெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உ(யிரி)ழப்பு!

லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.

இந்தியா அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும். என சீனாவுக்கு எச்சரிக்கை.!

இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை, பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கும் சீனா.

கர்நாடகாவில் ஊரடங்கு இனி தேவை இல்லை என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவிப்பு.

Tamil News Today World

அரிசோனா, புளோரிடா மற்றும் டெக்சாஸில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு.!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைப்பு.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பீஜிங்கிலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்.

இங்கிலாந்தில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணைக்குழு அமைக்கபடுமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவிப்பு.

Tamil News Live

சுஷாந்த் தற்கொலைக்கு சல்மான் கான், கரன் ஜோகர் என 8 பேர் மேல் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவரும் திரைப்படம் “பென்குயின்” வரும் ஜூன் 19ஆம் திகதி (நாளை) நேரடியாக அமேசான் ப்ரைமில்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பு. வரலாற்றில் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Today News Tamil – Tamil News Today 18-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 17.06.2020 Today Rasi Palan 17-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 18.06.2020 Today Rasi Palan 18-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!